உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் இன்ஸ்பெக்டரின் வாகன கண்ணாடிகள் கல்வீசி உடைப்பு

Published On 2022-08-10 14:23 IST   |   Update On 2022-08-10 14:23:00 IST
  • தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மணிமாறன்.

இவரது வீடு தூத்துக்குடி சகாயமாதாநகரில் உள்ளது. இரவில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பணி முடிந்து போலீஸ் வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவில் கண்ணாடியை உடைக்கும் சத்தம் கேட்டு மணிமாறன் பார்த்த போது அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பின் இருபுறமும் உள்ள கண்ணாடி கற்கள் வீசி உடைக்கப்பட்டு சிதறிக்கிடந்தது.

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் வாகனத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதில் உள்ள பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News