உள்ளூர் செய்திகள்

அரசின் ரகசியங்களை விற்க முயன்ற பொறியியல் பட்டதாரி கைது

Published On 2023-03-05 08:19 IST   |   Update On 2023-03-05 08:19:00 IST
  • அரசின் ரகசியங்களை வெளிநாட்டு ஏஜன்சிக்கு விற்க முயற்சி செய்ததாக, ஓசூர் அருகே பொறியியல் பட்டதாரியை போலீசார் கைது செய்தனர்.
  • பொறியியல் பட்டதாரியை சேலம் மத்திய சிறையில் அடைத்த போலீசார், பின்னணியில் இருக்கும் ஏஜென்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பைரகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியின் மகன் உதயகுமார்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆய்வகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றினார்.

பணியின்போது ஆய்வகத்தில் இருந்த ரகசியம் ஆவணங்களை அவர் தனது செல்போனில் படம் எடுத்ததாகத் தெரிகிறது. பணியில் இருந்து வெளியேறிய பிறகு அந்த ஆவணங்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு அவர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர், மதகொண்டப்பள்ளி அருகே உதயகுமாரைக் கைது செய்தனர். அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்த போலீசார், பின்னணியில் இருக்கும் ஏஜென்சிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News