உள்ளூர் செய்திகள்
தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிராக போராட்டம்- டி.ஜி.பி. அலுவலகத்தில் இந்து முன்னணி புகார்
- தி கேரளா ஸ்டோரி படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள்.
சென்னை:
தி கேரளா ஸ்டோரி படம் தொடர்பாக இந்து முன்னணி மாநகர தலைவர் இளங்கோவன் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இந்த படம் பயங்கரவாத செயல்களுக்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வு படத்துக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்த நிலையில் போராட்டம் நடத்துகிறார்கள். சீமான் தலைமையில் முற்றுகையிட போவதாக கூறி உள்ளார்கள். அவரை கைது செய்ய வேண்டும். திரையிடப்பட்டுள்ள திரையரங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.