உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் விட்டுவிட்டு கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-10-30 15:19 IST   |   Update On 2023-10-30 15:19:00 IST
  • பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.
  • உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மேலும் பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளதால் பழைய சீவரம், வள்ளிபுரம் மற்றும் வாயலூர் பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்தது. இதனால் பழைய ரெயில் நிலையம், வளக்கடி கோவில் தெரு, ராஜாஜி மார்க்கெட் உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் தேங்கியது.

உத்திரமேரூர் பகுதியில் லேசான சாரல் மழை மட்டுமே பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், அச்சிறுப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News