உள்ளூர் செய்திகள்

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சித்ரவதை- தாத்தா உள்பட 2 பேர் மீது வழக்கு

Published On 2022-08-13 12:50 IST   |   Update On 2022-08-13 12:50:00 IST
  • தாத்தா பெரியண்ணன், மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
  • சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி கிராமத்தில் 5 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து அலுவலர் ஞானம் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது அவரது தாத்தா பெரியண்ணன், மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவலை சிறுமி குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தாள். இது குறித்து அவர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை கொடுத்த பெரியண்ணன், சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News