உள்ளூர் செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் வேனில் இருந்த ரூ.87 ஆயிரம் அபேஸ்
- பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவரைப்பேட்டை:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது தச்சூர். இங்குள்ள கடைகளுக்கு பொன்னேரியை சேர்ந்த பல்பொருள் விற்பனை நிறுவன மேலாளர் மகேஷ் (வயது 41) மற்றும் ஊழியர்களான ஜெயபால், சூர்யா ஆகியோர் பொருட்களை சப்ளை செய்தனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த மினி லோடு வேனை சாலையோரம் அவர்கள் நிறுத்தி இருந்தனர்.
அப்போது அங்கு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் வேனின் முன்புறம் ரூ.87 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்த பணப்பையை அபேஸ் செய்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பினர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.