உள்ளூர் செய்திகள்
ரெயில்வே ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- பிரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
ஆரம்பாக்கம்:
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் நாகராஜ் (வயது 28). ரெயில்வே ஊழியரான இவர் கடந்த 28-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யர்கண்டிகையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார்.
நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்துபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஆரம்பாக்கம் போலீசர் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.