உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்ற 16 பேர் கைது

Published On 2022-10-21 17:42 IST   |   Update On 2022-10-21 17:42:00 IST
  • கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 16 பேரை கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதை தடுக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெபதாஸ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த முருகன் (வயது 34), கீழ்முதலம்பேடு குமார் (49), ரமேஷ் (46), சிந்தலகுப்பம் பிரபு (22), பரணம்பேடு ஏசு (50), பிரித்வி நகர் முருகன் (36), அப்பாவரம் பிரகாசம் (40), ராக்கம்பாளையம் காசி (37), தாணிப்பூண்டி ரகு (50), காட்டுகொல்லைத்தெரு மோகன் (49), எளாவூர் தொம்பரை (63), காரனோடை அன்பழகன் (40), தபால் தெரு முகமது யாசர் அரபாத் (31), கொண்டமநல்லூர் பூபாலன் (56), நாயுடுகுப்பம் புஜ்ஜி அய்யா (59), சின்னவழுதிலம்பேடு ரமேஷ் (46) ஆகிய 16 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 16 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 205 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News