உள்ளூர் செய்திகள்
பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா விற்றவர் கைது
கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.
பொன்னேரி:
பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த பொன்னேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரை கைது செய்தனர். அருகில் உள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.