உள்ளூர் செய்திகள்

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2022-12-23 16:31 IST   |   Update On 2022-12-23 16:31:00 IST
  • இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரை செய்தார்.
  • இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று உத்தரவிட்டார்.

திருக்கழுக்குன்றம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நெய்குப்பி பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்கிற சதீஷ் (வயது 29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்க்கான ஆவணத்தை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Similar News