பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கோழிகளை திருடிய கும்பல்- பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
- பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார்.
- பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
பொன்னேரி:
பொன்னேரி அருகே உள்ள சைனாவரம் பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் வீட்டின் வெளியே தான் வளர்த்து வரும் கோழிகளை அடைத்து வைத்து இருந்தார்.
இன்று அதிகாலை இவரது வீட்டின் வெளியே அடைக்கப்பட்டு இருந்த கோழிகளை முகமூடி அணிந்த 4 மர்மநபர்கள் திருடினர்.
சத்தம்கேட்டு மதன்குமார் வெளியே வந்ததும் கோழிகளை திருடிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். பொதுமக்கள் அதிகஅளவில் திரண்டதால் அவர்கள் ஏற்கனவே வேறு இடத்தில் திருடி கொண்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், மதுபாட்டில் ஆகியவற்றை அங்கே போட்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்மகும்பல் விட்டு சென்ற செல்போன், மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.