உள்ளூர் செய்திகள்
கூடுதல் வட்டி தருவதாக பெண்ணிடம் ரூ.3½ லட்சம் மோசடி
- திருவள்ளூர் அடுத்த காக்களூர் அஞ்ச நேயபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி.
- போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் அஞ்ச நேயபுரத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பிரேம் குமார் அறிமுகம் ஆனார். அவர் பணத்தை தன்னிடம் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து விஜயலட்சுமி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை பிரேம் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
ஆனால் அவர் குறிப்பிட்ட படி வட்டித்தொகை கொடுக்கவில்லை. இதையடுத்து விஜயலட்சுமி பணத்தை திருப்பிகேட்டார். பிரேம்குமார் ரூ.1 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்ததாக தெரிகிறது. மீதி பணத்தை கொடுக்கவில்லை. இதுகுறித்து விஜயலட்சுமி திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரேம்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.