உள்ளூர் செய்திகள்

தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்டு, அமித் குமாரை தூக்கி வருவதை படத்தில் காணலாம்.

செல்பி எடுக்க மலை மீது ஏறிய போது தவறி விழுந்த தொழிலாளி- 3 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்

Published On 2023-08-15 08:22 GMT   |   Update On 2023-08-15 08:22 GMT
  • கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
  • 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

கிருஷ்ணகிரி:

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 25).

இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏறிய அவர், செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மொபைலும் உடைந்துள்ளது.

கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சற்குணம், ராஜி, இளவரசன், மஞ்சூர் அஹமத், அன்பு, நவீன் குமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செங்குத்தான பகுதியில், 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

பின்னர் அவரை தீயணைப்பு படை வீரர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6.30 மணி வரை அமித்குமாரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News