உள்ளூர் செய்திகள்
அரியலூர் அருகே செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் போராட்டம்
- டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த இந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சேனாபதி கிராமத்தில் உள்ள செல்போன் டவரில் விவசாயிகள் சண்முக சுந்தரம், வேலுமணி ஆகிய 2 பேர் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.