உள்ளூர் செய்திகள்

மொரப்பூர் அருகே களை எடுக்கும் எந்திரத்தில் சிக்கி உடல் சிதறி விவசாயி பலி

Published On 2023-08-01 13:22 IST   |   Update On 2023-08-01 13:22:00 IST
  • உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
  • மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மொரப்பூர்:

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே ஆர்.கோபிநாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 62). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவர் இன்று காலை தனது தோட்டத்தில் களை எடுக்கும் எந்திரத்தை வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரத்தில் கால்கள் மாட்டி கொண்டதால் உடல் முழுவதும் அந்த எந்திரத்தில் சிக்கியது. இதில் வெங்டேசன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து உறவினர்கள் மொரப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News