உள்ளூர் செய்திகள்

சாலையோரம் கிடந்த காலாவதியான கடலை, எள்ளு மிட்டாய் பாக்கெட்டுகள்


மாமல்லபுரத்தில் சாலையோரத்தில் குவியலாக வீசப்பட்ட காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகள்

Published On 2022-07-17 16:20 IST   |   Update On 2022-07-17 16:20:00 IST
  • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி சர்வதேச 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது.
  • மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி சர்வதேச 44வது "செஸ் ஒலிம்பியாட்" போட்டி தொடங்குகிறது. இந்தபோட்டி ஆகஸ்ட் 10-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரம், வெண்புருஷம் சாலை யோரத்தில் இன்று காலை ஏராளமான மிட்டாய் பாக்கெட்டுகள் குவியலாக வீசப்பட்டு கிடந்தன. இதுகுறித்து அறிந்ததும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காலாவதியான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் பாக்கெட்டுகள் அதிக அளவில் வீசப்பட்டு இருந்தது.

அதனை கொட்டியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக மாமல்லபுரம் பகுதியில் கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து வியாபாரிகள் கடைகளில் இருந்த காலாவதியான மிட்டாய் பாக்கெட்டுகளை சாலை யோரம் வீசி இருக்கலாம் என்று தெரிகிறது.

Tags:    

Similar News