உள்ளூர் செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் - அதிமுகவை விட 33,612 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை

Published On 2023-03-02 13:04 IST   |   Update On 2023-03-02 13:04:00 IST
  • ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
  • அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதல் சுற்றில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

மொத்தம் 15 சுற்றுகளாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 7-வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3,006, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News