வீட்டு உபயோக பொருள் விற்பனை கடையில் போலி பில் தயாரித்து ரூ.18 லட்சம் மோசடி- ஊழியர் கைது
- நாகராஜ் போலி பில் தயாரித்து வீட்டு உபயோக பொருட்களை மற்ற கடைகளுக்கு சப்ளை செய்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரம் வரை சுருட்டி இருப்பது தெரிந்தது.
- திருவொற்றியூரில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்:
புது வண்ணாரப்பேட்டை, கிராஸ் ரோட்டை சேர்ந்தவர் அஜீஸ் குப்தா. இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், பிரபல நிறுவனத்தின் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இங்கு புது வண்ணாரப்பேட்டை, ராமஅரங்கனல் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பவர் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடை உரிமையாளர் அஜிஸ்குப்தா கடையின் விற்பனை கணக்குகளை சரிபார்த்த போது ஊழியர் நாகராஜ் போலி பில் தயாரித்து வீட்டு உபயோக பொருட்களை மற்ற கடைகளுக்கு சப்ளை செய்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரம் வரை சுருட்டி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அஜீஸ் குப்தா, புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட நாகராஜை தேடிவந்தனர். இதற்கிடையே திருவொற்றியூரில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.