உள்ளூர் செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
- முதியவர் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- முதியவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு (வயது 67) இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சுகர் அதிகமாகி அடிக்கடி மயக்கம் அடையும் நிலை ஏற்பட்டதால் மன உளைச்சலில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.