உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

Published On 2023-08-23 09:28 GMT   |   Update On 2023-08-23 09:28 GMT
  • கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது.

நாமக்கல்:

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

கடந்த 20-ந்தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற என்.இ.சி.சி. கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பி.சி.சி. அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Tags:    

Similar News