நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு
- முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) கடந்த 1-ந்தேதி முதல் பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் மைனஸ் இல்லாத பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.45 ஆகவும், எக்ஸ்போர்ட் முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோழிப்பண்ணையாளர்கள், முட்டை வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்யும்போது, ஏற்கனவே என்.இ.சி.சி விலையில் இருந்து முட்டை விலையை குறைத்து விற்பனை செய்தனர். இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை.
முட்டை வியாபாரிகளுக்கும் என்.இ.சி.சி.க்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் முட்டையை மைனஸ் விலைக்கு விற்கத் தேவையில்லை என்று என்இசிசி அறிவித்துள்ளது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-சென்னை-495, பர்வாலா-444, பெங்களூர்-490, டெல்லி-460, ஹைதராபாத்-435, மும்பை-495, மைசூர்-495, விஜயவாடா-470, ஹொஸ்பேட்-450, கொல்கத்தா-540.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.114 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.82 ஆக நிர்ணயித்துள்ளது.