வருகிற சட்டமன்ற தேர்தலில் வென்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ. தி.மு.க. அரியணை ஏறும்- பா.பென்ஜமின் பேச்சு
- 100 ஆண்டுகள் கடந்தும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம்.
- புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் அவர் வழங்கிய சத்துணவு திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்கள் இன்று பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.
அம்பத்தூர்:
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அ. தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின்106 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நொளம்பூர் பாரதி சாலையில் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் எம்.இம்மானுவேல் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மத்திய மாவட்ட அ. தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சர் அமைப்பு செயலாளருமான பா.பென்ஜமின், கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமின் பேசியதாவது:-
100 ஆண்டுகள் கடந்தும் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறோம். எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் போனார்கள். ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்றால் அவர் வழங்கிய சத்துணவு திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்கள் இன்று பல்வேறு உயர் பதவிகளில் இருக்கிறார்கள். கடந்த 2016 - ம் ஆண்டு அம்மா அவர்களால் நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் நொளம்பூர் கூவம் அருகே பாலப்பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மண் பரிசோதனை செய்யப்பட்டு திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது அதுமட்டுமில்லாமல் மாவட்ட தலைநகரங்களில் உள்ளது போல் இந்த நொளம்பூர் பகுதியில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், ரேஷன் அலுவலகம், தாலுகா நீதிமன்றம், என அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வந்தது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த எடப்பாடி யார் அரசு. 10 ஆண்டு காலத்தில் சுமார் 3000 கோடிக்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியதும் எடப்பாடியார் அரசுதான். வருகிற சட்டசபைத் தேர்தலில் அம்மாவின் நல் ஆசியுடன் எடப்பாடி யார் தலைமையில் கழக ஆட்சி அரியணை ஏறியே தீரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ் ஏ. மணிமாறன், தி.பா. கண்ணன், காசு ஜனார்த்தனம், ஜாவித்அகமது, பகுதி செயலாளர்கள் கே.தாமோதரன், இ.கந்தன், மாநகராட்சி எதிர்க்கட்சித் துணை தலைவர் நெற்குன்றம் டி.சத்யநாதன், ஒன்றிய செயலாளர் ராஜா என்கிற பேரழகன், கே.எஸ்.ரவிச்சந்திரன், கே.ஜி.டி.கௌதமன், கே.ராஜ கோபால், துண்டலம் பி.பாபு, முகப்பேர் இளஞ்செழியன், சந்திர சேகர், மகேந்திரன், ரமேஷ், மகேஷ் பிரபு, அந்தமான் முருகன், நெற்குன்றம் சதீஷ்குமார், பி.ரமேஷ், புனிதவதி, முகப்பேர் ஆர்.ராதாகிருஷ்ணன், கோமதி, சி.பவானி, வி.லட்சுமணன், டி.குட்டி,எம்.பாலமுருகன், எம்.கே.எஸ்.உதயா, சந்திரபோஸ், ராஜேந்திரன், உட்பட மாவட்ட பகுதி வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.