உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளரை இடமாற்றம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-11-08 12:25 IST   |   Update On 2023-11-08 12:25:00 IST
  • திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம்:

பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவி. இவர் வங்கியில் உள்ள பணியாளர்களை தரக்குறைவாக பேசியும், பணியாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியும், துறை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொ ள்ள பரிந்துரை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் நகர வங்கியின் துணைப்பதிவாளர் உமாதேவியை இடமாற்றம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மண்டல ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக வளாகத்தில் எதிரே நடைபெற்றது. கூட்டுறவு துறை ஊழியர் சங்க தலைவர் சத்ய நாராயணன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் மற்றும் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது துணைப்பதிவாளர் உமாதேவிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். அவர் இதற்கு முன்பு மயிலாடுதுறை, செங்கல்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் பணிபுரியும் போதும் இதே போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News