உள்ளூர் செய்திகள்

படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய வட மாநில கும்பல்- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2022-06-21 10:52 GMT   |   Update On 2022-06-21 10:52 GMT
  • கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என செல்போனில் பேசியவர் தெரிவித்தார்.
  • மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த முத்து மகன் விஷ்ணுபிரியன் (வயது 25). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் எனது செல்போன் வாட்ஸ்அப்புக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு புது எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. மற்றொரு எண்ணில் இருந்து பேசிய நபர் தாங்கள் வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வேண்டும், இது தொடர்பான செயலியில் சென்று பார்த்தால் விவரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணில் நான் தொடர்பு கொண்ட போது கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என அதில் பேசியவர் தெரிவித்தார்.

மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போன் எண்கள் யாருடையது , எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இதில் தொடர்புடைய பெரிய கும்பல் சிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News