உள்ளூர் செய்திகள்

அரிசி ஆலை உரிமையாளரின் மடியில் அமர்ந்து உணவு வாங்கி சாப்பிடும் காகம்- வீடியோ வைரல்

Published On 2023-03-20 09:07 IST   |   Update On 2023-03-20 09:55:00 IST
  • ஆலையில் நெல், அரிசி இருப்பதால் அந்தப் பகுதியில் காகம், குருவி போன்ற பறவைகள் அதிக அளவில் காணப்படும்.
  • மடியில் உட்கார்ந்து முறுக்கு, கடலை போன்றவைகளை வாங்கி காகம் குழந்தை போல் சாப்பிட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள மாவடிபண்ணை பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். பட்டப்படிப்பு படித்து விட்டு சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வருகிறார். அவரது ஆலையில் நெல், அரிசி இருப்பதால் அந்தப் பகுதியில் காகம், குருவி போன்ற பறவைகள் அதிக அளவில் காணப்படும்.

ஆனால் அவர் உணவு சாப்பிடும்போது காகம், குருவிக்கு வைத்து விட்டு சாப்பிடுவது வழக்கம். அதில் ஒரு காகம் மட்டும் அவருடன் நன்றாக பழகி உள்ளது. அவர் மடியில் உட்கார்ந்து முறுக்கு, கடலை போன்றவைகளை வாங்கி குழந்தை போல் சாப்பிட்டு வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News