உள்ளூர் செய்திகள்

பழனியில் அனுமதியின்றி பறவைகளை பதுக்கி வைத்த தம்பதி கைது

Published On 2023-06-16 06:30 GMT   |   Update On 2023-06-16 06:30 GMT
  • சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பழனி:

பழனி ஆவணிமூலவீதியில் உள்ள ஒரு வீட்டில் அரியவகை பறவைகள் ஏராளமாக வளர்க்கப்படுவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து இன்று வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வீட்டில் இருந்த மாரிமுத்து(52), அவரது மனைவி பார்வதி(45) ஆகியோர் காட்டில் மட்டும் வாழும் பறவைகளை அதிகளவில் வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 40 பச்சைக்கிளிகள், 70 முனியாஸ் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து பழனி வனச்சரகர் குமரேசன் தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சமீபகாலமாக பச்சைக்கிளி உள்ளிட்ட அபூர்வ வகை பறவைகளை வீட்டில் வளர்க்ககூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிளிகள், புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்களை யாரும் அடைத்து வைத்து வளர்த்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட கிளிகள் மற்றும் பறவைகள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது குறித்தும், இதனை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News