உள்ளூர் செய்திகள்

டானியா பள்ளிக்கு செல்வதை அறிந்து மகிழ்ச்சி- மு.க.ஸ்டாலின்

Published On 2023-04-11 16:04 IST   |   Update On 2023-04-11 16:04:00 IST
  • மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமி டானியாவை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.
  • சிறுமி டானியா பள்ளியில் சேர்ந்தது குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை:

ஆவடி ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் – சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிக்கரம் நீட்டுமாறு, சிறுமி டானியா கோரிக்கை விடுத்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறுமி டானியாவுக்கு பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2 கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து வீடு திரும்பிய சிறுமி டானியவை, அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் நலம் விசாரித்து படிக்கிறாயா என கேட்டதற்கு படிப்பதாக மகிழ்ச்சியுடன் சிறுமி தெரிவித்து இருந்தார். ஏற்கனவே சிறுமி டானியாவின் கல்வி படிப்பு மற்றும் அதற்கான செலவினை ஏற்று கொள்வதாக திமுக பிரமுகர் ஒருவர் உறுதி அளித்திருந்தார்.


இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், சிறுமி டானியாவை தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார். சிறுமி டானியா பள்ளியில் சேர்ந்தது குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,

அன்புள்ள டானியாவுக்கு,

பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி!

ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்! என கூறியுள்ளார்.

Tags:    

Similar News