உள்ளூர் செய்திகள்
வரலாற்று வானில் ராஜராஜசோழன் புகழ் துருவ நட்சத்திரமாய் மின்னும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும்.
சென்னை:
மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவித்த கலைத்திறமும், களங்கண்ட போர்களில் எல்லாம் வெற்றி முரசம் கொட்டிய தீரமும் உடைய மும்முடிச் சோழன் ராஜராஜனின் புகழ் வரலாற்று வானில் துருவ நட்சத்திரமாய் என்றும் மின்னும். அரசர்க்க ரசர் பிறந்த ஐப்பசி சதய நாள் இனி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.