உள்ளூர் செய்திகள்

செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-01-20 11:58 IST   |   Update On 2023-01-20 11:58:00 IST
  • வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • செங்கை தமிழரசன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கை தமிழரசன் தலைமையில் செங்கல்பட்டு பழைய பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பனையூர் பாபு எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் ஆதவன், ராஜ்குமார், தேவ அருட்பிரகாசம், அன்புச்செல்வன், வழக்கறிஞர் சொக்கலிங்கம், தென்னவன், சாந்தன், ரவீந்திரன், ராஜ்குமார், ஜனா, வெங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News