வாலிபரை கத்தி முனையில் மிரட்டி செல்போன் பறிப்பு
- செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் சதாசிவம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள மாடம்பாக்கம் சதாசிவம் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் நேற்று முன்தினம் ஊரப்பாக்கம் அடுத்த அருங்கால் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு காரணைப்புதுச்சேரி அருகே காட்டுப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 வாலிபர்கள் சதீஷ்குமாரை வழிமறித்து அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சதீஷ்குமார் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோல் அருங்கால் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் அருங்கால் வனப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன விஜய் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டார். இது குறித்து விஜய் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.