உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் நூதன முறையில் 6 பவுன் நகை திருட்டு

Published On 2023-01-07 17:45 IST   |   Update On 2023-01-07 17:45:00 IST
  • சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு ஆட்டோ சரஸ்வதி மீது மோதியது.
  • சரஸ்வதி பர்சை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து சரஸ்வதி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பின்னர் திண்டுக்கல்லில் இருந்து தனியார் பஸ் மூலம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை மேம்பாலம் அருகே வந்து இறங்கினார். பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு ஆட்டோ சரஸ்வதி மீது மோதியது.

இதில் சரஸ்வதி கையில் வைத்திருந்த 6பவுன் நகை இருந்த பர்ஸ் கீழே விழுந்தது.

சரஸ்வதி பர்சை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து சரஸ்வதி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். கீழ விழுந்த நகை இருந்த பர்சை திருடிச் சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நூதன முறையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News