உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபர் மகனை கடத்திய கட்டிட காண்டிராக்டர் தற்கொலை

Published On 2022-09-17 10:03 GMT   |   Update On 2022-09-17 10:03 GMT
  • கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராகேஷ் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிவக்குமார் மகனை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
  • ராகேசை பிடிக்க திருப்பூர் போலீசார் கேரளா விரைந்தனர்.

திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள வேலம்பாளையம் சொர்ணபுரி பகுதியை சேர்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளர் சிவக்குமார் என்பவரின் மகன் சஞ்சய் பிரணவ் ரூ.6 கோடி கேட்டு மர்மநபர்களால் கடத்தப்பட்டார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராகேஷ் என்பவர் தொழில் போட்டி காரணமாக சிவக்குமார் மகனை கேரளாவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராகேசை பிடிக்க திருப்பூர் போலீசார் கேரளா விரைந்தனர்.

இந்தநிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து ராகேஷ் கொல்லத்தில் உள்ள தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து மாணவனை மீட்க போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News