உள்ளூர் செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே பிறந்த 11 நாளில் தொட்டிலில் தூங்கிய ஆண் குழந்தை திடீர் மரணம்

Published On 2022-09-10 12:08 IST   |   Update On 2022-09-10 12:08:00 IST
  • ஆப்பக்கூடல் அருேக உள்ள அத்தாணி குப்பாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தவாகிருஷ்ணன், இவரது மனைவி பவித்ரா.
  • பிறந்த 11 நாளிலேயே ஆண் குழந்தை இறந்தது குறித்து சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆப்பக்கூடல்:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருேக உள்ள அத்தாணி குப்பாண்டம் பாளையத்தை சேர்ந்தவர் தவாகிருஷ்ணன் (23), இவரது மனைவி பவித்ரா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் பவித்ரா கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த 29-ந் தேதி கருவல்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் குழந்தை பிறந்த 11-வது நாளில் பவித்ரா தனது குழந்தைக்கு பால்கொடுத்து விட்டு தொட்டிலில் தூங்க வைத்தார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா குழந்தையை சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுப்பற்றிதெரிய வந்ததும் ஆப்பக்‌கூடல் போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் குழந்தையின் சாவுக்கான காரணம் தெரியவரும்.

மேலும் பிறந்த 11 நாளிலேயே ஆண் குழந்தை இறந்தது குறித்து சுகாதாரத்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News