உள்ளூர் செய்திகள்

அசோக்நகரில் சூறாவளி காற்றால் வேரோடு சாய்ந்த மரம்- ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

Update: 2023-06-10 10:48 GMT
  • சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது.
  • போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

போரூர்:

சென்னை அசோக்நகர் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்று வீசியது. இந்த சூறாவளி காற்றின் வேகம் காரணமாக 7-வது அவென்யூ பகுதியில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் இரவு 9 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்தபடி மரம் விழுந்ததால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

தகவல் அறிந்து அசோக்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போக்குவரத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் சாலையில் கிடந்த மரத்தை எந்திரங்கள் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மரம் முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்தபட்டது இதையடுத்து ஒரு மணி நேரம் கழித்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. மரம் விழுந்தபோது அவ்வழியாக வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News