உள்ளூர் செய்திகள்

அண்ணா பதக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு- கலெக்டர் தகவல்

Published On 2022-11-27 12:13 GMT   |   Update On 2022-11-27 12:13 GMT
  • வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.
  • உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் அடங்கும். இந்த பதக்கம் எந்தவொரு குடிமக்களுக்கும் வயதை பொருட்படுத்தாமல், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினை காப்பதில், வீர தீர செயல்கள் புரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதை பெற தகுதியுள்ளவர்.

2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுகிறது.

மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News