உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி கோர்ட்டில் ஆஜர்
- அமர் பிரசாத் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- கானத்தூர், கோட்டூர்புரம் வழக்குகள் தொடர்பாக அமர்நாத் பிரசாத்தை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர்.
சென்னை:
சென்னையை அடுத்த பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய போது பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜே.சி.பி. எந்திரத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கானத்தூர், கோட்டூர்புரம் வழக்குகள் தொடர்பாக அமர்நாத் பிரசாத்தை போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் 2022-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்த வழக்கில் இன்று எழும்பூர் கோர்ட்டில் அவர் ஆஜரானார்.