உள்ளூர் செய்திகள்

ஆலந்தூரில் தே.மு.தி.க. பிரமுகர் மீது தாக்குதல்

Published On 2022-10-26 13:32 IST   |   Update On 2022-10-26 13:33:00 IST
  • ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆலந்தூர் மடுவின்கரை முதல் குறுக்குத் தெருவில் குடியிருப்பவர் செந்தில். தே.மு.தி.க. பிரமுகர். 160-வது வட்ட துணை செயலாளராக உள்ளார்.

நேற்று மாலை செந்தில் வீட்டின் அருகே எம்.கே.என் சாலையில் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செந்திலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News