உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய ஏர் டெக்கான் விமான ஊழியர்கள்

Published On 2023-08-07 16:44 IST   |   Update On 2023-08-07 16:44:00 IST
  • 1995ல் இந்திய அரசிடம் சிறியரக வானூர்தி அனுமதி பெற்று கோபிநாத் என்பவர் ஏர்டெக்கான் என்ற பெயரில் விமான சேவையை துவங்கினார்.
  • 50-க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒன்று கூடினர்.

மாமல்லபுரம்:

விமான பயணத்தை ஏழைகளும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் 1995ல் இந்திய அரசிடம் சிறியரக வானூர்தி அனுமதி பெற்று கோபிநாத் என்பவர் ஏர்டெக்கான் என்ற பெயரில் விமான சேவையை துவங்கினார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், சூரத், திருவனந்தபுரம், பெங்களூரு, சென்னை, கோவா, ஐதராபாத், அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய கேப்டன், செக்யூரிட்டி, சோதனை அதிகாரி, விமான பணிப்பெண், அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் 20ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் ஒன்று கூடினர்.

ஆண்கள், பெண்கள் அனைவரும் ஒன்றாக கூடி ரீயூனியன் பெஸ்ட்-2023 என்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி, கேக்வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஒரு சிலர் தங்களது குடும்பத்தாருடன் வந்திருந்தனர்.

Tags:    

Similar News