உள்ளூர் செய்திகள்

சென்னை குடிநீர் ஏரிகளில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பு

Published On 2022-08-07 13:44 IST   |   Update On 2022-08-07 13:44:00 IST
  • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போது மான அளவுக்கு உள்ளது.
  • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும்.

திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு போது மான அளவுக்கு உள்ளது. புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஆகிய 5 நீர்த் தேக்கங்களிலும் 70 சதவீதத் துக்கும் அதிகமாகவே தண்ணீர் இருப்பு காணப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் சென்னை மாநகரையொட்டியுள்ள புழல் நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 21.20 அடியாகும். இதில் தற்போது 19.80 அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 கன அடி ஆகும். இதில் 2,972 கன அடி தண்ணீர் தற்போது உள்ளது.

சோழவரம் ஏரியின் மொத்த அடி 18.86 அடியாகும். இதில் மட்டும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது. 2.97 அடி நீர் இருப்பு இருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியாகும். இதில் 22.20 அடி தண்ணீர் உள்ளது. 3,645 கன அடி நீர் கொள்ளவை கொண்ட இந்த நீர் தேக்கத்தில் 3,172 கன அடி தண்ணீர் உள்ளது.

பூண்டி நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதில் 27.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,231 கன அடி இருக்கும் நிலையில், தற்போது 1,229 கன அடி தண்ணீர் உள்ளது.

தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தின் மொத்த உயரம் 36.61 அடியாகும். இது முழு கொள்ளளவுடன் காட்சி அளிக்கிறது.

இதன் மூலம் இந்த நீர் தேக்கங்களில் இருந்து சென்னை மக்களுக்கு தேவையான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Similar News