உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த 56 வகையான நாய்கள்

Published On 2023-05-13 05:33 GMT   |   Update On 2023-05-13 05:33 GMT
  • சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது.
  • நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

ஊட்டி:

ஊட்டியில் கோடை விழாவை முன்னிட்டு கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. சவுத் இந்தியன் கெனல் கிளப் சார்பில் 132 மற்றும் 133-வது நாய் கண்காட்சி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல் நிகழ்ச்சியாக நாய்களின் கீழ் படிதல் போட்டியுடன் கண்காட்சி தொடங்கியது. இதில் லேப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரிட்டிவர், பீகள், பெல்ஜியம் மேலினாயஸ், டாஷ்ஹ வுண்ட் உட்பட 56 நாய்கள் பங்கேற்றன. கொல்கத்தாவை சேர்ந்த நடுவர் சி.ஆர்.பட்நாயக் நாய்களை மதிப்பிட்டார். இதில் நாய்கள் நடந்து வந்த விதத்தையும், பவ்யமாக படுத்து கீழ்படிதலை காட்டியதை பார்த்து சுற்றுலா பயணிகள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், சிறப்பு கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய் கண்காட்சியும் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட கிரேட்டேன் மற்றும் டாஷ்ஹவுண்ட் நாய்கள் போட்டியிட்டன. நடுவர் பிலிப் ஜான் மதிப்பிட்டார்.

இது தொடர்பாக தென்னிந்திய கெனல் கிளப் செயலாளர் நகீனா கூறிய தாவது:-

இந்தாண்டு நாடு முழு வதிலும் இருந்து 56 ரகங்களில் 470 நாய்கள் பங்கேற்கின்றன. நாய்களை மதிப்பிட பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேரிபெல், சிங்கப்பூரை சேர்ந்த ஸ்டான்லி ேஷன் மற்றும் தைவானை சேர்ந்த சங் யூ சேங்க் நடுவர்களாக பணிபுரிகின்றனர்.

கீழ் படிதல் போட்டியில் ஜம்ஷெட்பூரில் நடக்கும் போட்டியில் தான் அதிகளவு நாய்கள் பங்கேற்கும். அதையடுத்து, ஊட்டியில் நடக்கும் கண்காட்சியில் தான் 56 நாய்கள் பங்கேற்றுள்ளன. நீண்ட காலத்துக்கு பிறகு இந்தாண்டு ஆஸ்திரேலியா ஷெப்பர்டு, பூடூல் ரக நாய்கள் பங்கேற்றுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News