உள்ளூர் செய்திகள்
அரசு பஸ்களை இயக்க ஒப்பந்த அடிப்படையில் 400 டிரைவர்கள் நியமனம்- போக்குவரத்து துறை திட்டம்
- புதிதாக நியமிக்கப்படும் ஒப்பந்த டிரைவர்கள் ஒரு வருடம் பணியில் இருப்பார்கள்.
- சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் டெண்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளன.
சென்னை:
தமிழகத்தில் அரசு பஸ்களை இயக்க ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்களை நியமனம் செய்ய போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்த டிரைவர்களை சென்னை, திருச்சி, நாகை, கும்பகோணம், மதுரை, கோவை, ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 400 டிரைவர்களை நியமனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. சென்னையை சேர்ந்த 4 நிறுவனங்கள் டெண்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளன.
புதிதாக நியமிக்கப்படும் ஒப்பந்த டிரைவர்கள் ஒரு வருடம் பணியில் இருப்பார்கள். வருகிற ஜூலை மாதம் முதல் இவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தெரிகிறது. முன் அனுபவம் உள்ளவர்கள் டிரைவர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.