உள்ளூர் செய்திகள்
மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
- மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் பகுதியில் இன்று அதிகாலை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தனர். இதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த அஸ்வின், பரணி என்பதும் இருவரும் அந்த பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.