உள்ளூர் செய்திகள்
திருத்தணியில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
- போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி, காந்தி சாலையில் பட்டா கத்தியுடன் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், திருத்தணி அக்கைய்யா நாயுடு தெருவைச் சேர்ந்த முகமது யூசப் அலி, முருகப்பா நகரைச் சேர்ந்த நிர்மல் என்பது தெரிந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.