உள்ளூர் செய்திகள்

தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-08-07 12:00 IST   |   Update On 2023-08-07 12:00:00 IST
  • வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு புதிய காலனியை சேர்ந்தவர் சபாபதி. இவர் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவியரசி. இவர்களது மகள் தர்ஷினிதா (வயது 15). பண்ணூரில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கூழ் ஊற்ற வேண்டும் என்பதால் வெளியே விளையாட செல்லாமல் வீட்டை சுத்தம் செய்யுமாறு தர்ஷினிதாவை தாய் கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த தர்ஷினிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News