உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-25 15:03 IST   |   Update On 2023-08-25 15:07:00 IST
  • 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
  • இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருச்சி 

பொது விநியோகத்தை பலப்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த பருவ கால ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் எடை குறைவு இல்லாமல் தரமான பொருட்களை வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும், நவீன அரிசி ஆலைகளை தனியார் மயமாக்க கூடாது,நுகர் பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு கூடுதல் பயன் கொண்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் கொள்முதல் நிலையங்களில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார்.சங்கத்தின் பெயர் பலகையினை மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் திறந்து வைத்தார்.கோரிக்கைகளை விளக்கி மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன்,மாநிலச் செயலாளர் ராசப்பன்,மண்டல செயலாளர் தீனதயாளன் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன்,சி.ஐ.டி.யு மாவட்ட குழு ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News