உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜியிடம் உடல்நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published On 2023-06-14 10:54 IST   |   Update On 2023-06-14 11:08:00 IST
  • தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை
  • உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனை சென்று உடல்நலம் விசாரிப்பு

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.

செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் காலை 10.30 மணியளவில் மு.க. ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனை வந்தார். பின்னர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்படும் அறைக்கு சென்று உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News