உள்ளூர் செய்திகள்
தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவு நீக்கப்படாது- அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் அறிவிப்பு
- அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது.
- அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
சென்னை:
வரும் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் நீக்கப்படாது.
வரும் கல்வி ஆண்டு முதல் தற்காலிக நீக்கம் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் இந்த கல்வி ஆண்டு எந்த பாடப்பிரிவும் நீக்கப்படாது.
அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் பாடங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.