உள்ளூர் செய்திகள்

ஓசூரில் நாளை நடக்கிறது: மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

Published On 2023-06-23 14:35 IST   |   Update On 2023-06-23 14:35:00 IST
  • கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.
  • ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.

ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை 100 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

இதையொட்டி, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள மாநகராட்சி பள்ளியில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாமினை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் ஆணையாளர் சினேகா ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு ,காது, மூக்கு, தொண்டை பிரிவு, கண் நோய் பிரிவு, மனநல மருத்துவம், பல்நோய் பிரிவு, காச நோய், தொழுநோய் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். மேலும், ஈசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன், மற்றும் எக்கோ பரிசோதனையும் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்". இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News