உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

Published On 2023-03-30 12:24 GMT   |   Update On 2023-03-30 12:24 GMT
  • ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
  • சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரில் ஸ்விகி ஊழியர்கள் உணவு விநியோகம் செய்வதை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக ஊழியர்கள் கூறுகையில் ,

ஸ்விகி ஊழியர்களுக்கு கோடைகாலத்தில் பணியாற்ற ஊக்கத் தொகை வழங்க வேண்டும். மேலும் இரவு நேரத்தில் கிராமப்புற பகுதிகளை சென்றால் வழிப்பறி விபத்து ஏற்படுகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இஎஸ்ஐ பிஎப் பிடித்தல் ஏற்படுத்த வேண்டும்.

திருவள்ளூர் வட்டாரத்தில் 40 ஊழியர்கள் பணியாற்ற வந்தனர் தற்போது கூடுதலாக 40 பேர் நியமித்துள்ளனர். மேலும் வட்டத்திற்கு தனி மேலாளர்கள் நியமிக்க வேண்டும்.

சுகியில் புதிதாக வந்தவர்கள் மட்டும் ஆர்டர்கள் கொடுக்கப்படுகின்றனர். பழைய ஊழியருக்கு ஆர்டர்கள் கொடுப்பதில்லை

மேலும் எவ்வளவு வேலை பார்த்தாலும் சம்பளம் குறைவாகவே வழங்கப்படும். என்றனர்.

திருவள்ளூர் வட்டாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட டெலிவரிகள் செய்யப்பட்டு மூன்று லட்சம் வரை வருவாய் ஈட்டினர்.

இந்த போராட்டத்தால் 3000க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் டெலிவரி செய்யப்படாமல் இருந்ததால் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள்.

Tags:    

Similar News