உள்ளூர் செய்திகள்

நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி பெறும் கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசினார்.

நிள அளவர் மற்றும் வரைவாளர்கள் பொதுமக்களுக்கு சேவை புரியும் எண்ணங்களுடன் பணியாற்ற வேண்டும்: கலெக்டர் அருண் தம்புராஜ் அறிவுரை

Published On 2023-06-17 07:56 GMT   |   Update On 2023-06-17 07:56 GMT
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
  • நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கடலூர்:

கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 99 நிள அளவர் மற்றும் வரை வாளர் ஆகியோர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே தனியார் கல்லூ ரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அருண் தம்பு ராஜ் நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் பேசுகையில், இப்பணியில் ஈடுபடும் அனைவரும் மக்கள் பணி தான் மிக முக்கியமாக கருதி பணி புரிய வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றுவரும் நிலஅளவர் மற்றும் வரைவா ளர்கள் பயிற்சி யினை முழுமையாகவும், ஆர்வத்துடனும் அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். களத்தில் பணியாற்றும் போது நேர்மையுடனும், பொதுமக்களுக்கு சேவை புரியும் எண்ணங்களுடனும் பணியாற்ற வேண்டும் என பேசினார். அப்போது உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கோட்ட ஆய்வாளர்கள் நாராயணன் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News